அமைவிடம்
மாவிட்டபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் உள்ளது. இக் கோயிலின் வரலாறும், இவ்வூருக்குப் பெயர் வந்த வரலாறும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திக் கூறப்படுகின்றன.
சோழநாட்டு இளவரசி ஒருத்திக்கு குதிரைமுக நோய் எனப்படும் நோய் ஏற்பட்டதாகவும் இது எந்த மருந்துக்கும் குணமாகாததால், யாழ்ப்பாணத்துக்கு வந்து இன்றைய மாவிட்டபுரப் பகுதியில் இருந்த புனித நீர்நிலை ஒன்றில் நீராடிக் குணம் பெற்றதாகவும், அதனால் மகிழ்ச்சியுற்ற இளவரசி அப்பகுதியில் முருகனுக்கு ஒரு கோயில் எழுப்பியதாகவும். இந்நிகழ்வை ஒட்டியே இவ்வூருக்கும் மாவிட்டபுரம்(மா (குதிரை) + விட்ட + புரம்) என்ற பெயர் ஏற்பட்டது என்பதும் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் நிலவும் ஐதீகம்.
பெரியார்கள்
- பிரமஸ்ரீ சா.சுப்பிரமணியக் குருக்கள்
- நாதஸ்வர வித்துவான் எஸ்.கே. ராசா
- நாதஸ்வர வித்துவான் நா.சோ.உருத்திராபதி
- பண்டிதர் க. சச்சிதானந்தன்
- தமிழறிஞர் த.சண்முகுசுந்தரம்
- மகாராஜஸ்ரீ சு.து.ஷண்முகநாதக் குருக்கள்
- நாதஸ்வர வித்துவான் எம்.எஸ் சண்முகநாதன்
- நவனித கிருஸ்ணபாரதியார்
- பண்டிதர் வே.மகாலிங்கசிவம்
- புலவர் ம. பார்வதிநாதசிவம்
- கண் வைத்தியர் வைரமுத்து
- யோகர் சுவாமிகள்
ஆலயங்கள்
- மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்
- முத்துமாரி அம்மன்
- வீணியவரை அம்மன்
- தலையிட்டி வைரவர் கோவில்
சமூக சேவைப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்
- பளை வீமன்காமம் வடக்கு கிராம அபிவிருத்தி அமைப்பு
- மாவிட்டபுரம் தெற்கு கிராம அபிவிருத்தி அமைப்பு
- பளை வீமன்காமம் தெற்கு கிராம அபிவிருத்தி அமைப்பு
- மாவிட்டபுரம் கிராம அபிவிருத்தி அமைப்பு
- உலகத்தமிழ் பண்பாட்டு மையம்
பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்கள்
- நட்சத்திரம் விளையாட்டுக் கழகம்
- மாவை விக்றி விளையாட்டுக் கழகம்
- யுத் றீபன்ட் விளையாட்டுக் கழகம்
0 comments:
Post a Comment