Monday, January 21, 2019

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோத்தர தேர் பவளக்கால் நாட்டுவிழா

இலங்கையில் 45 அடி உயரத்தில் பெருந் தேராக அமைக்கப்பட்ட ஷண்முகப் பெருமான் மகோத்தர தேர் பவளக்கால் நாட்டுவிழா இன்றைய தினம் (20-01-2019) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

குறித்த தேருக்கான பவளக்கால் நாட்டும் விழாவை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு ஸ்நபனா அபிஷேகமும், 8.30 மணிக்கு விஷேட பூசை ஆராதனைகளும், 10 மணிக்கு பவளக்கால் உள்வீதி திரு ஊர்வலமும நடைபெற்று காலை 10.30 மணிக்கு பவளக்கால் நாட்டு விழா நடைபெற்றது.
இலங்கையிலுள்ள தேர்களிலேயே மிக உயரமான தேராகக் கருதப்படும் மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலின் முகவுத்தரத் தேரானது, 45 அடி உரமானதாக ஸ்தபதி கந்தசாமி இளங்கோவன் அவர்களால் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்படி பவளக்கால் விழாவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு, முருகப் பெருமானின் திருவருளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.












0 comments:

Post a Comment