Monday, July 29, 2019

மாவை கந்தனின் "முகஉத்தர" திருத்தேர் வெள்ளோட்ட பெருவிழா

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட "முகஉத்தர" திருத்தேர் வெள்ளோட்ட நிகழ்வு இன்றைய (28-07-2019) தினம் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.



காம்போற்சவ திருவிழாவின் 22ம் நாள் ஆகிய இன்று காலை வழமைபோல் காலை பூசைகள் நடைபெற்றதன் பின்னர் 10 மணியளவில் புதிய தேருக்கு முன்னால் கிரிகிகைகள் ஆரம்பிக்கப்பட்டு கலசம் வைத்தல் நிகழ்வினை தொடர்ந்து புதிய தேர் வெள்ளோட்ட நிகழ்வு நூற்றுக்கணக்காக பக்த்தர்கள் புடைசூழ மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இந்த "முகஉத்தர" திருத்தேர் இலங்கையிலேயே உயரம் கூடிய தேர்களில் ஒன்றாக 45 அடி உய­ரம் கொண்டதாகவும் சிறப்­பான சிற்­பங்­க­ளை­யும் கொண்­ட­தாகவும் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

தேரினை யாழ்ப்பாணம் உடுவிலம்பதி நிதர்சன் சிற்பாலய அதிபர், விஸ்வபிரம்மஸ்ரீ சிற்பகலாரத்தினம், ஸ்தபதி, கந்தசாமி இளங்கோவன் (கோபி ஆச்சாரியார்) தலைமையில் அவர்தம் பஞ்சகிருத்திய பரிவாரர்கள். நிர்மாணித்துள்ளனர்.

இன்றைய வெள்ளோட்ட நிகழ்வில் தேரினை உருவாக்கிய ஸ்தபதி கந்தசாமி இளங்கோவன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

இதனைத் தோடர்ந்து கூமார் 2.30 மணியளவில் தேர் வெள்றோட்ட நிகழ்வு ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இவ் நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களில் இருந்து பக்த்தர்கள் வருகை தந்ததோடு வெளிநாடுகளில் இருந்தும் அடியவர்கள் கலந்து கொண்டார்கள்.


இவ்தேருக்கான பவளக்கால் நாட்டுவிழா 20-01-2019 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக செய்தி படங்களை பார்வையிடுவதற்கு



















0 comments:

Post a Comment