Wednesday, August 28, 2019

Apple and Samsung நிறுவனங்கள் மீது புற்றுநோய் கதிர்வீச்சுக்களை வெளியிடுவதாக அமெரிக்காவில் வழக்கு!!

தொழில்நுட்ப நிறுவனங்களான Apple and Samsung நிறுவனங்களின் Smartphone ல் தீங்கு விளைவிக்கும் Radio frequency (RF) கதிர்வீச்சுகளை அதிகமாக வெளியிடுவதாக அமெரிக்காவில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.




FCC சட்ட வரம்புகளை மீறிய Apple and Samsung Smartphone ல் வெளிப்படும் ஆர்.எஃப் கதிர்வீச்சு ‘ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் ( Federal Communications Commission)’ வகுத்துள்ள சட்ட வரம்புகளை மீறுவதாக உள்ளதென்று கலிபோர்னியாவின் வடக்கு அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிக கதிர்வீச்சுகளை வெளிப்படுத்தும் அலைபேசிகள் தீங்கு விளைவிக்கும் ஆர்.எஃப் கதிர்வீச்சுகளை அதிகம் வெளிப்படுத்தும் அலைபேசி மொடலாக அப்பிளின் ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 8 (iPhone 7 and iPhone 8) மொடல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் 8 மற்றும் சாம்சங் கேலக்ஸி நோட் 8 (Galaxy S8, Galaxy S9, and Galaxy J3 ) மொடல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

சிகாகோ ட்ரிப்யூனின் நடத்திய சோதனையில், ஐபோன் 7 இல் இருந்து வெளிவரும் ரேடியோ-அதிர்வெண் கதிர்வீச்சு விதிக்கப்பட்ட சட்ட பாதுகாப்பு வரம்பை விடவும் இரு மடங்கிற்கும் அதிகமாக உள்ளதென்று கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment