Monday, May 11, 2020

உங்கள் மின்சார கட்டணங்களை நீங்களே கணித்துக்கொள்ள!

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் நிலவும் அசாதாரண சுழ்நிலை காரணமாக மாதமாதம் நாம் செலுத்தும் மின்கட்டணங்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக செலுத்தாமல் இருக்கின்றோம். 

இந்நிலையில் எமது மின்கட்டணம் எவ்வளவு வரும் என நாம் அனைவரும் அதனை எவ்வாறு அறிந்து கொள்வது என்று குழப்பத்தில் இருக்கின்றோம். 

இந்நிலையில் இதற்கான ஒரு வழியை இலங்கை மின்சார சபை அதன் இணையத்தளத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.

இதன் மூலம் எமக்கு இறுதியாகக் கிடைத்த மின் பட்டியல் தினத்திலிருந்து இன்று வரை எத்தனை மின் அலகுகள் பாவித்திருக்கிறோம் எனப் பார்த்து அதனை அந்த செயலியில் செலுத்துவதன் மூலம் நாம் எவ்வளவு மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை மிகவும் இலகுவாக அறிந்து கொள்ளலாம்.இதனை அறிந்து கொள்ள கீழுள்ள லின்க் இனை கிலிக் செய்யவும்.

 https://www.ceb.lk/bill-calculation-commercial/en