இலங்கையில் நாதஸ்வரம் தவில் வாசிக்கும் மங்களவாத்தியக் கலையை அன்னியராட்சிக்குப் பின் முதலில் அறிமுகம் செய்த திருக் கோவில் மாவிட்டபுரம் கந்தசாமி கோவில்.
யாழ்ப்பாணத்தில் பெரிய சப்பறம் கட்டும் மரபினை இவ்வாலயமே அறிமுகம் செய்தது.
மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் சங்கீத கதாப்பிரசங்கம்.
சங்கீத கதாப்பிரசங்கத்துக்கு மிகவும் முக்கித்துவம் கொடுத்து வளர்த்த மாவை ஆதீனம் இந்தியாவிலிருந்து பல பெரியவர்களை அழைத்து சமயமேன்மையை வளர்த்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் சங்கீத கதாப்பிரசங்க வித்தகராக விளங்கிய சங்கரசுப்பையர்,மணிபாகவதர்,அருட்கவி.விநாசித்தம்பிப் புலவர்,கொக்குவில் புலவர் குமாரசாமி எனப்பல பெரியவர்கள் கதாப்பிரசங்கம் தொடராக மாவை ஆதீனத்தில் நிகழ்த்தியுள்ளனர்.கடந்த சில வருடங்களாக பிரமஶ்ரீ.நித்தியானந்த சர்மா அவர்களின் கதாப்பிரசங்கம் நடைபெற்று வருகிறது.
சீர்மேவு நவரத்ன கோலமிகு சிங்கார
செம்பொனின் மகுட முடியும்
திவ்விய குணங்களோ ராறுமாய் விறுற்ற
செய்யமுக மூவி ரண்டும்
ஏர்மேவு நீபமலர் மாலையொடு செச்சைமலர்
இனமாலை புரளு மார்பும்
எழின்மேவு மகமேரு கிரிபோல் நிலவுற்ற
இணையிலாப் புயமீ ராறும்
கார்மேவு கடலிலேழு மலரிபோல் மயிலில்வரு
கனகமய மேனி யோடு
கவின்மேவும் ஆண்டலைக் கொடியுவேற் படையுமாய்க்
காட்சிதந் தருள்புரி குவாய்
பார்மேவு பல்லுயிர்க் குயிராகி நிறைகின்ற
பாரமேசுர வடிவமே!
பாவலா! தேவர்தங் காவலா! மாவையம்
பதியில்வதி கந்த வேளே!
திரு ஆறுதிருமுருகன் அவர்கள் தனது முகப்புத்தகத்தில் மாவிட்டபுரம் ஆலயம் தொடர்பில் கூறிய சில தகவல்களின் தொகுப்பு
நன்றி - திரு ஆறுதிருமுருகன்


0 comments:
Post a Comment