Wednesday, August 5, 2020

உங்களது வாக்குச் சீட்டை இணையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்!!

வாக்குச் சீட்டுகளைப் பெறாதவர்களும் இன்று நடைபெறும் பொதுத்தேர்தலில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

 தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையதளத்தில் தங்கள் அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு அவர்களின் பெயர்கள் தேர்தல் பதிவேட்டில் உள்ளதா என சரிபார்க்கலாம் 

அல்லது கிராம சேவகர்கள் வைத்திருக்கும் தேர்தல் பட்டியலில் பெயர்கள் இருந்தால், அதனை பெற்று சரியான அடையாளத்துடன் வாக்களிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பலர் தங்கள் வாக்குச் சீட்டுகளை இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை என கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். 

 “அவர்களின் பெயர் பட்டியலில் இருந்தால், அவர்கள் தபால் நிலையத்திற்குச் சென்று தங்கள் அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம். இல்லையென்றால், பட்டியலில் அவர்களின் பெயர் இருந்தால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்திலோ அல்லது அந்தந்த கிராம சேவகர்கள் மூலமோ சரிபார்க்கலாம். அவர்களின் பெயர்கள் இருந்தால், அவர்கள் எந்தவொரு சரியான அடையாள அட்டையையும் வாக்குச் சாவடிகளில் சமர்ப்பிக்கலாம். அனைத்து வாக்காளர்களும் இன்று வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என கூறினார். 

இதனடிப்படையில் உங்களது பெயர் வாக்காளர் பதிவேட்டில் இருக்கின்றதா என்பதனை இலங்கை தேர்தல் ஆனணக்குழுவின் இணையத்தளத்திற்கு சென்று சரிபார்த்துக்கொள்ள முடியும்.

இணையத்தள முகவரி https://eservices.elections.gov.lk/myVoterRegistration.aspx




இந்த இணையத்தளத்திற்கு சென்று உங்களது தேசிய அடையாளஅட்டை இலக்கத்தினை வழங்குவதன் மூலம் உங்களது பெயர் வாக்களர் பதிவேட்டில் இருக்கின்றதா என  அறியமுடியும். அவ்வாறு உங்களது பெயர் வாக்காளர் பதிவேட்டில் காணப்பட்டால் தங்களுக்கான வாக்குச்சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும்