இன்று WhatsApp பயன்படுத்தும் அனைவரும் விரும்பியோ விரும்பாம்மலோ பல குழுக்களிலோ அல்லது ஒரு குழுவிலோ அங்கத்தவராக இருப்பீர்கள். இதில் சிலதில் நீங்கள் விரும்பி இணைந்த குழுவும் இருக்கலாம் அல்லது உங்கள் நண்பர்கள் உங்களை இணைத்துவிட்ட குழுவில் உங்கள் விருப்பம் இன்றியும் அங்கத்தவராக இருக்கலாம்.
அப்படி நீங்கள் WhatsApp Group ல் அங்கத்தவராக இருக்கின்ற போது பின்வரும் விடயங்கள் உங்களுக்கு பலன் உள்ளதாக அமையும் என்று நம்புகின்றேன்
1.WhatsApp Group ல் உங்களது தொலைபேசி இலக்கத்தினை மறைப்பதற்கு
WhatsApp ல் உங்களது நண்பர்களுக்கிடையில் உருவாக்கிய group என்றால் அனைவரையும் உங்களுக்கு தெரிந்திருக்கும் இதனால் எந்தால் பிரச்சினையும் ஆனால் சில வியாபார நோக்காக கொண்டு உருவாக்கிய group ல் உங்களுக்கு தெரியாத நபர்களும் அங்கத்தவர்களாக இருக்கலாம் அவர்களுக்கு உங்கள் தொலைபேசி இலக்கம் தெரியக்கூடாது என நீங்கள் நினைத்தால் பின்வரும் வழிமுறை மூலம் உங்கள் தொலைபேசி இலக்கத்தினை மறைக்கலாம்
settings சென்று அங்கு Account என்பதினை தெரிவு செய்து அதில் Privacy என்பதினை தெரிவு செய்து அதில் காணப்படும் About என்பதை தெரிவு செய்யும் போது மூன்று தெரிவுகள் காணப்படும்
- Everyone - இதனை தெரிவு செய்வதன் மூலம் அனைவருக்கும் உங்கள் தொலைபேசி இலக்கம் அனைவருக்கும் தெரியும்
- My Contacts - இதனை தெரிவு செய்வதன் மூலம் உங்கள் தொலைபேசியில் நீங்கள் செமித்து வைத்திருக்கும் நபர்களுக்கு மட்டும் உங்கள் தொலைபேசி இலக்கம் தெரியும்.
- Nobody - இதனை தெரிவு செய்வதன் மூலம் அனைவருக்கும் உங்கள் தொலைபேசி இலக்கம் தெரியாது
2. யார் யார் உங்களை WhatsApp Group ல் இணைத்துக் கொள்ள முடியும்
WhatsApp Group ல் நீங்களாக சென்று இணைவதை விடவும் சில நபர்கள் உங்களை Group ல் இணைத்து விடுவது தான் அதிகமாக இருக்கும் இது சில நேரத்தில் நன்மையாக இருந்தாலும் சில நேரங்களில் உங்களுக்கு தேவையில்லாத அல்லது விருப்பம் இல்லாத குழுக்களில் அவர்கள் மீண்டும் மீண்டும் இணைத்து கொண்டே இருப்பார்கள்.
இதனைத்தடுப்பதற்கு settings சென்று அங்கு Account என்பதினை தெரிவு செய்து அதில் Privacy என்பதினை தெரிவு செய்து அதில் காணப்படும் Group என்பதை தெரிவு செய்யும் போது மூன்று தெரிவுகள் காணப்படும்
- Everyone
- My contacts
- My contacts except...
0 comments:
Post a Comment