Wednesday, June 16, 2021

Zoom Meeting இல் மாணவர்கள் வரைவதை எவ்வாறு தடுக்கலாம்???

இன்று அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மட்டுமன்றி ஏனையோருக்கும் அவசியமானதாக ஒன்றாக மாறிவிட்டது zoom செயலி.

அந்தவகையில் zoom செயலியை பயன்படுத்துபவர்கள் நிறைய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். 

அதில் ஒன்று தான் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கும் போது ஆசிரியர்கள் அவர்களது திரையை பகிர்ந்து கொள்ளும் போது மாணவர்கள் அதில் வரைவது. 

இதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். இது நிறைய பேருக்கு தெரிந்த விடயம் தான் என்றாலும் தெரியாதவர்கள் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் 

ஆசிரியர்கள் அல்லது meeting ஐ நடாத்துபவர்கள் திரையை பகிர்ந்து கொண்டதும் (share screen) திரையின் மேற்பகுதியில் தோன்றும் Bar ல் more என்பதினை தெரிவு செய்யும் போது தோன்றும் sub menu வில் "Disable Attendee Annotation" என்பதினை தெரிவு செய்வதன் மூலம் மாணவர்கள் வரைவதினை தடுக்கு முடியம்.
திரும்ப மாணவர்களுக்கு வரையும் வசதியினை ஏற்படுத்தி கொடுப்பதற்கு Bar ல் more என்பதினை தெரிவு செய்யும் போது தோன்றும் sub menu வில் "Enable Attendee Annotation" என்பதினை தெரிவு செய்தல் வேண்டும்

0 comments:

Post a Comment